search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு தொழிலாளர்"

    பட்டாசு தொழிலாளர்களின் பட்டினியை எங்களால் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். #FireWorkers #SupremeCourt
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளிக்கு 2 மணி நேரமும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் மாசுக்கேடு மற்றும் வாகனப்புகையால் உண்டாகும் மாசுக்கேடு குறித்து மத்திய அரசு ஒரு ஒப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வாகனப்புகையால் அதிக அளவு மாசுக்கேடு உண்டாகும் நிலையில் பட்டாசுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்களின் வேலையின்மையை தடுக்கும் வகையில் வழிமுறைகளை மத்திய அரசு கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பாக நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அந்த பகுதியில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உள்ளது.

    பட்டாசு தயாரிக்கும் தொழில் சட்டரீதியான தொழில். அதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது பட்டாசு தொழிலுக்கே தடை விதிக்க வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம்? என்று வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலர் பட்டாசுகள் சரியானவை அல்ல என்பதால், ஒரு பிரிவினர் பட்டினியால் வாடுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நிரூபணம் இல்லாத சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பட்டாசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமையில் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது. இந்த வழக்கை நாங்கள் மிகவும் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். வழக்கின் விசாரணை ஏப்ரல் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். 
    பட்டாசுத்தொழில் மேம்பட, பட்டாசு உற்பத்தி அதிகரிக்க, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது. மேலும் தீபாவளி மட்டுமல்லாமல் அனைத்து பண்டிகை நாட்களிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சிவகாசி, விருதுநகர் உள்பட நாடு முழுவதும் பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கும் நியாயமான, சந்தோசமான தீர்ப்பு. உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பினால் பட்டாசுத் தொழில் மேம்பட்டு, பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோரும், தொழிலாளர்களும் முன்னேற்றம் காண வேண்டும்.

    நம் நாட்டில் சீனப்பட்டாசு போன்ற வெளிநாட்டின் தயாரிப்பில் கள்ளத்தனமாக விற்கப்படுகின்ற பட்டாசுகளை எவரும் வாங்க முன்வர வேண்டாம். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை மட்டுமே வாங்கி நம் நாட்டு உற்பத்திக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் தான் ஆதரவாக இருக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் பட்டாசுக் கடைகளுக்கு உரிய அனுமதி, அங்கீகாரம் கொடுத்து விற்பனைக்கும், வியாபாரத்திற்கும் துணை நிற்கவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    மொத்தத்தில் பட்டாசுத்தொழில் மேம்பட, பட்டாசு உற்பத்தி அதிகரிக்க, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan
    ×